என்னப்பா முடிவு செஞ்சிட்டியா நீ?
அப்பாவின் குரலில் ஏக்கம் எதைக் காட்டுகிறது என்று புரியாமலே சட்டை அணிந்த மாதவன், சிறிது நேர அவகாசத்தில்
இதில் என்னப்பா முடிவு? ஒரு மாறுதல் தானேப்பா..
கல்யாணம் ஆன புதுசில நீங்களும் அம்மாவும் இந்த தாத்தா வீட்டுக்கும், அந்த தாத்தா வீட்டுக்கும் போயிக்கொண்டிருந்தீர்களேப்பா...
சரி அவங்க எல்லாம் அப்போ இருந்தாங்க போனோம், ஆனா இப்ப ரெண்டு பக்க கதவும் அடைச்ச மாதிரியில்ல நாங்க உன்னோட இருக்கோம்..
அம்மா...எதற்கோ வந்தவர்கள்... மாதவா சாயங்காலம் வரச்ச ஒரு அரை கிலோ தனியா வாங்கி வா... அப்படியே மறக்காம நல்ல வாடாம இருக்கிற கொத்தமல்லியும் கரிவேப்பிலையும் வாங்கியாடா..
சரிம்மா... சரிப்பா நான் வரேன் சாயங்காலம் பேசலாம்...
ஏய் மாது...டிபன் ரெடியா?
சில குடும்பங்கள் மாலையும் இரவும் வருவதே முக்கியமான முடிவுகள் எடுப்பதற்காகவேவா... யோசித்தவாறே வந்த மாது...
டேபிலில் தட்டை வைத்து மல்லிப்பூ மாதிரி இல்லாத இரண்டு இட்லி வைத்து விட்டு..சாம்பார் எடுத்துவர உள்ளே போனாள்...
அந்த வழியே வந்த மாதவன் அம்மா...
என்னடா தட்டுல இட்லி மட்டும் இருக்கு சாம்பார் கூட ஊத்தாம எங்கடா போயிட்டா?
பிள்ளை கிழவனா இருந்தா கூட பறிமாறிடவே வரும் எல்லா அம்மா மாதிரி தான் அவன் அம்மாவும் வந்தார்கள்..
கேட்டுக்கொண்டிருந்த மாதவி மாமியாரின் பேச்சிலும் சிந்திய சாம்பாரினாலும் விரல்களை சப்பிக்கொண்டாள்...
பெண்களுக்கு உப்பு இருக்கான்னு பார்க்கவும், இப்படி அடிக்கடி சப்பிக்கொள்ளவே விரல்களை படைத்தானோ பிரம்மன்.
ஏய் மாது? இந்தா இட்லியை எடுத்துட்டு வேற இட்லி வை அவனுக்கு...
கல்யாணம் ஆயி முழுசா 3 வருசம் ஆச்சி...அவ அவ வயிற்றில் ஒன்னும் இடுப்பில் ஒன்னுமா திரியாறங்க... ச்சே... வெள்ளையா இருந்தா மட்டும் போதுமா?... கேட்டு விட்டு ஒன்னுமே தெரியாத மாதிரி நகர்ந்த அம்மாவையும்
எல்லாத்தையும் கேட்டுகிட்டே.... கேக்காத மாதிரி வந்த மாதுவையும் பார்க்கவே அஞ்சினான்.... எப்படி இருக்க முடியும் சுளையா அஞ்சி லட்சம்...கொடுத்து பொண்ணையும் கொடுத்தாங்களே...
நான் அப்பவே நினைச்சே...அவங்க அஞ்சி லட்சம் கேக்காமே தரும்போது ...உள்ளேயிருந்து..உருட்டுவதற்கே வைத்திருந்த பாத்திரங்களை..உருட்டிக்கொண்டிருந்த அம்மாவையும்...
கடவுள்..கண்ணை பேப்பர் படிக்கவும் , காதை பட்ஸால் தேய்க்கவும் மட்டுமே என்று அந்த வீட்டின் சாமிகளின் எண்ணிக்கையில் ஒன்றை கூட்டியவாறு..
பல இடங்களில்...பிள்ளை வளர்ந்ததும்..அம்மாக்களின் வாயில் நஞ்சு நுழைந்துக்கொள்வதைப் போலவே அப்பாக்களின் கண்களிலும் காதுகளிலும் ஏதாவது அடைத்துக்கொள்கின்றது..
எட்டு வீடு தள்ளி எட்டு பக்கம் பார்த்தாலும் சரி இல்ல எந்த பக்கம் பார்த்தாலும் சரி... இந்த பிரச்சினை...
காலங்காலமா வர பிரச்சனைகளில் ஒன்று தான்..
கல்யாணம் ஆயி வீட்டுக்கு வர அதும் குனிஞ்சிகிட்டே வர அனேக பெண்கள்..தரையை பார்த்தே... வீட்டு கூரையை பிச்சிக்கிற அளவுக்கு தேறிடாறாங்க...
மாதவன்..ஆபிஸில் செல்லும் வழியில்... இருந்த முதியோர் இல்லத்தில்..மானேஜரை பார்த்து விவரங்கள் சொன்னான் அப்படியே சொன்ன விவரங்களைக் கேட்டு வந்து மறக்காம பக்கத்து சீட்டு பத்ரி கிட்டேயும் சொன்னான்..
பத்ரி போனை எடுத்து ஆறு பேருக்கு மட மட வென பேசி வழியெல்லாம் சொல்லி எல்லாரையும் மாலை அஞ்சி மணிக்கே வரச்சொல்லி ...மூச்சிரைத்தான்..
மானாஜர்..முதியோர் இல்லத்தை சுற்றிக்காட்டினார்... மற்ற விவரங்கள் அனைத்தும் தலையாட்டலுடன் முடிந்து கொடுத்த காபியை குடித்து விட்டு வந்தனர்...
காபி கேட்டு குடித்தனர்... அடுத்த வாரம் முதல் அப்பாவும் அம்மாவும் வந்து சேரப்போகிற இடமாயிற்றே...
மாலை ஆறு பேருமே..வரிசையா உள்ளே நுழைந்து கீழே தேடி அடுத்தவன் அப்பா அம்மாவை ஆசை தீர வணங்கினர்... ஏழாவதா வந்த மாதவன் நேரா சமையலறையில் தனியா வடை செஞ்சிட்டியா? மாதுவை முறைத்தபடி கேட்டான்..
மாது தனியா வா? எதுக்கு எப்ப சொன்னிங்க?
தகவல் தொடர்பை அலுவலகத்தில் செயல்படுத்துபவன்..இங்கே தவறிவிட்டான்...
மாமியார் அடுத்த அறையில் எல்லாம் அறிந்தும் வெளியே வராமல்..
வெளியே இருந்த மாது எதுவும் தெரியாமல்... கைகளின் விரல்களில் அழுக்குகளை எடுத்துக்கொண்டிருந்தாள்...
குளிக்கும்போது தேய்ச்சிக்காம நடு ஹால்ல விரலை தேய்க்கிற மாதுவை திட்டறதா... இல்ல..
காலைல தனியா வாங்கியாடான்னு சொன்ன அம்மாவை திட்டறதா..
இல்ல அப்படி சொல்லியும் வாங்கியாம வந்த தன்னை திட்டறதா..
ஆனா திட்டணுமே அது தானே ஆம்பிளையின் அழகு...
வாசலில் செருப்பை தள்ளி வைத்த வேலைக்காரியை பார்த்து அத்தனை பேரின் எதிரில் திட்டியதில்..ஹால்... அடங்கி ஒடுங்கி போயிவிட்டது..
ச்சே ... ஐந்து லட்சம் கொடுத்த அப்பனையும் அம்மாவையும்..பனிரெண்டாவதா முறையா.. உள்ளுக்குள்ளே..திட்டி தீர்த்தாள்..மாது..
போகும்போழுது சுவற்றின் மூலையில் ஒரு கோட்டை கீறிவிட்டு...
அடுப்பில் கொதித்த பாலையும் டிகாசனையும் கலக்கி.. வடிகட்டி..எடுத்து வந்து கொடுக்க ஆரம்பித்தாள்..
குடிக்கும் முன்னர் ஆறு பேரில் ஒருவன் சிஸ்டர்..அரை சக்கரை தானே போட்டீர்கள்..என எரியும் தீயில் எண்ணெயை ஊற்றினான்..
டேய் இந்தாடா..இதில் சக்கரை கம்மியா இருக்கிற மாதிரி இருக்கு என்று சொல்லி எவனோ ஒருவன் நீட்டிய காபியை...இவன் குடிப்பதை..பார்த்து..
மாது கர்மம்..கர்மம்..என்று சொல்லிக்கொண்டே ஓடினாள்..
எல்லாம் முடிந்தது.... ஆறு வீட்டிலும் ஆறு ஆறு பேரா போய் பேசி முடிச்சிட்டு பெட்டுக்கு வந்தவன் கண்ணில்..மாது..வேறு மாதிரியா தெரிந்தால்..ஆனால்..மணி 12ஆகிவிட்டதால்..அப்படியே..அடிபட்ட நாயை போல தூங்கினான்..
அம்மாவுக்கும் கட்டிகிட்டவளுக்கும் ஓடி ஓடி நாயா போகும் நினைப்பு...
ச்சே கல்யாணமே பண்ணிக்காம இருந்திருக்கலாமா எனத் தோன்றியது...
கல்யாணம் பண்ணிக்கிற வரைக்கும் பண்ணிக்கடா பண்ணிக்கடான்னு நச்சரிக்கற அம்மாக்கள்..மருமகள்..வந்ததும் நச்சரிப்பை வருகிறவள்..மீது காட்டுவது...
மறுக்கப்படாத உண்மை தான்..ஆனா அம்மா என்ற ஓர் பந்தம் கைகளை கட்டி போட்டுவிடுகின்றது... ஒரு பக்கமே வீரத்தை காட்டவேண்டிய சூழலுக்கு ஆளாகிறான்...
முதியோர் இல்லம் எதுக்கு வந்தது...
ஒன்னு மருமகளை..கொடுமை படுத்துற மாமியார்களால் தான்..
அப்படி இப்படி தேடினிங்கனா மருமகள் படுத்துற பிக்கல் பிடுங்காம வருகிற மாமியார்கள் தான்...
அப்படி பட்ட மாமியாரை கொடுமை படுத்தக்கூடிய பெண்ணை வளர்க்கிற / வளர்த்த அம்மாக்கள்..தன் வீட்டு மருமகளையோ அல்லது பங்காளி வீட்டு மருமகளையோ ..மகளை..போல பார்த்தா... நம்ம வீட்டு பொண்ணும் போற வீட்டுல இருக்கிற மாமியாரை அம்மா போலவும்.. மாமனாரை அப்பா போலவும் பார்ப்பார்கள்....
ஆக முதியோர் இல்லங்கள்...பெருக காரணம் அம்மாக்களே தான் அது பெண்ணை பெற்ற அம்மாவா இருந்தாலும் சரி பிள்ளையை பெற்ற அம்மாவா இருந்தாலும் சரி...
மாமியார்...என்ற அளவிற்கு உயர்த்திக்கொண்டாலும்..அந்த தாய்மை என்ற உணர்வை..வேறு படுத்திக்கொள்கின்றனர்...
----------------------------
Saturday, March 7, 2009
Subscribe to:
Posts (Atom)
